திருமந்திரம்!
தேவர் பிரான் தனைத் திவ்விய மூர்த்தியை
யாவர் ஒருவர் அறிவார் அறிந்த பின்
ஓதுமின்; கேண்மின்; உணர்மின்; உணர்ந்த பின்
ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே.
கருத்து: இறைவனை உள்ளவாறு உணர்ந்தோர் யார் என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள். பின், அவரிடம் இருந்து கல்வி மற்றும் கேள்வி அறிவை அடையுங்கள்! அவ்வாறு கற்றும், கேட்டும் அறிந்ததை சிந்தித்துத் தெளிவு பெறுங்கள்! அவ்வாறு தெளிவு பெற்றோரே வாழ்வில் உயர்ந்து நிற்பர்.
No comments:
Post a Comment